குடும்பம் ,தனிச்சொத்து, அரசு - பிரடெரிக் ஏங்கெல்ஸ்
கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து எழுதிய அவரின் உற்ற தோழரான பிரடெரிக் ஏங்கெல்ஸ் இன் "குடும்பம், தனிச்சொத்து,அரசு" ஆகியவற்றின் தோற்றம் எனும் இந்நூல் மனிதகுல வரலாற்றை காட்டுமிராண்டி நிலையிலிருந்து தொழிற்புரட்சிக் காலத்திய நிலை வரையான பரிணாம வளர்ச்சியை மானுடவியல் கூறுகளின் துணைகொண்டு விளக்குகிறது.
வரலாற்றை திரிப்புகளின்றி அறிய முற்படுகிற ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. பல்வேறு இனங்களின் வாழ்வியல் கூறுகளையும் பரிணாம வளர்ச்சியும் பேசுபொருளாய் அமைந்திருக்கிறது. காட்டுமிராண்டி நிலை, அநாகரிக நிலை , நாகரிக நிலை மற்றும் தொழிற்புரட்சி போன்ற பகுதிகளை உள்ளடக்கிய இந்நூலில் அந்தந்த காலகட்ட மனித சமூகம் எதிர்கொண்ட சவால்கள் மேலும் பண்பாட்டு நிலை போன்றவை விவாதிக்கப்படுகின்றன.
- கனிஷ்கர்
கருத்துகள்
கருத்துரையிடுக