விடுதலை 2 : அரசபயங்கரவாதம் - காவல்துறை - மக்கள்

விடுதலை 2 திரைப்படம் வெளியாகி ஓரிரு மாதங்கள் ஆகியிருக்கிறது. நான் சமீபத்தில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இத்திரைப்படத்தின் வாயிலாக சர்வதேச இனப்பிரச்சனையையும் அரசின் ஏதேச்சதிகாரப் போக்கையும் மக்கள் புரட்சிக்கான தேவையையும் நக்சல்பாரி இயக்கங்களின் தலைமறைவு வாழ்க்கையும் அவர்களின் உன்னத லட்சியங்களும் அவற்றிற்காக அவர்கள் கொடுக்கும்  குருதியும் மற்றும் பலிகளும் திரைப்படத்தில் நன்கு பிரதிபலிக்கப்பட்டிருக்கின்றன. காவல்துறை நக்சல் போராளிகளை ஒடுக்கும் பலிபீடங்களை  தேர்ந்தெடுக்கின்றனர் படம் முழுவதும்.

 


 காதல் காட்சிகள் கதையோட்டத்துக்கு  சற்று தொய்வு ஏற்படுத்தியது. பண்ணையார் முறையும் அவர்களின் மனப்போக்கும் வாத்தியார் என்பவரை பொதுவுடைமையாளராக மாற்றுகிறது. கே.கே தோழர் போன்ற தோழர்களை நாம் ஒவ்வொரு மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலும் காணலாம். போராட்டக் களத்தில் உள்ள கம்யூனிஸ்ட்களின் போராட்டமும் அவர்களின் வலியையும் மட்டுமே பதிவு செய்திருக்கும் தமிழ் சினிமாவில் புரட்சி இயக்கங்கள் மற்றும் குழுக்களின் செயல்பாடு அவற்றினூடாக வீரம் செறிந்த ஆயுதக் கிளர்ச்சி போன்றவை சிறப்புற படமாக்கப்பட்டிருக்கிறது. கம்யூனிச மக்கள் புரட்சி வசனங்கள் படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது. இந்தியாவில் செயல்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மாவோயிஸ்ட் )  அமைப்பு போன்ற புரட்சிக்கர பாதையை தேர்ந்தெடுத்துப் பயணித்துக் கொண்டிருக்கும் இயக்கங்களை இப்படம் மூலம் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களின் கோரிக்கைகள் நியாயமானதுதான் ஏனெனில் கார்ப்ரேட்களின் நிலவள சுரண்டல், பழங்குடி மக்கள் வாழ்வுரிமை மற்றும் சமத்துவமற்ற சூழல் இவையாவும் தேசிய இனங்களில் ஒரு சிலரை தன்னெழுச்சியான மக்களின் ஆயுதப் போராட்டத்துக்கு வழிவகுக்கும். அத்தகையோரை தீவிரவாதிகள் என்று சித்தரிப்பது ஏற்கவியலாது என இத்திரைப்படம் நிறுவுகிறது.
                               - கனிஷ்கர்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்