யாத்திரை
காலாண்டு தேர்வுக்கு படிக்க விடுமுறை விட்டிருந்தார்கள். கோபாலும் அவன் நண்பர்களும் ரயிலில் ஊத்துக்குளியிலிருந்து கோயம்புத்தூர் செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். வேதியியல் தேர்வுக்கு எப்போதும் போல இல்லாமல் 4 நாட்கள் விடுமுறை விட்டிருந்தார்கள். கணித தேர்வு அன்று கோபாலும் அவன் நண்பர்களும் பக்கத்து பள்ளியில் படிக்கும் மாணவர்களோடு சண்டையிட்டு அவர்களில் இருவருக்கு மண்டையை உடைத்து விட்டனர். இதனால் காவல்துறையினரிடம் பிடிபடாமல் இருப்பதற்காக அடுத்த நாள் பள்ளி செல்லவில்லை. அதனால் தப்பித்தார்கள். இல்லையென்றால் அடுத்த நாளே மாட்டியிருப்பார்கள். அன்று தான் காவலர்கள் பள்ளிக்கு வருகை தந்து தலைமை ஆசிரியரிடம் இது குறித்து கேட்டிருக்கிறார்கள். சண்டை நடந்த இடம் பழைய மார்க்கெட் பின்புறம் என்பதாலும் அங்கு அதிகம் ஆள் நடமாட்டம் இல்லாததாலும் சண்டையிட்ட மாணவர்களை கண்டறிவது சற்று கடினமானது. எனவே தேர்வு அன்று மட்டும் போனால் போதும் என்று முடிவு செய்து இரண்டாம் நாள் கோயம்புத்தூர் செல்லலாம் என்று முடிவு செய்தார்கள். காலை 8 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் வருவதாக திட்டம். ஆனால் லோகேஷ் வரும் வழியில் ஒரு குடிகாரனிடம் சண்டையிட்டதால் குறித்த நேரத்துக்கு வர முடியவில்லை. லோகேஷ் தான் அந்த கும்பலின் தலைவன் என்று கூறும் அளவுக்கு திடகாத்திரமான உடல் வலிமை கொண்டவனாக இருந்தான். ஆனால் அவனை யாரும் மதிப்பதில்லை. கோபாலை தான் தங்கள் தலைவனாக ஏற்று கொண்டனர். இது லோகேஷ் ஐ அடிக்கடி எரிச்சல் அடைய செய்தது. இருப்பினும் சிறு வயது முதல் தங்கள் நண்பனாக இருக்கிறான் என்பதால் தன் வன்மத்தை கட்டுப்படுத்திக் கொள்வான்.லோகேஷ் லேட்டா வந்ததால் அவனை "பன்னிசூத்து" என்று திட்டினான்.
தினேஷு எங்க டா? என்று லோகேஷிடம் கோபால் கேட்டான். ஆனால் லோகேஷ் அவன் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணிடம் பேசி கொண்டிருந்ததாகவும் இருவரும் இன்று பூண்டி கோவிலில் மீட் பண்ண போவதாகவும் கூறினான். ஏன்டா அவன் மட்டும் இப்டி லேடீஸ் பின்னாடியே போயிட்டு இருக்கான். அது fake id அ இருந்தா நல்லா இருக்கும் நாய் அடி வாங்கியே சாகட்டும். அதான் காலைல perfume வாங்க வந்தான். இன்னைக்கு ஆள பாக்க போறான்னு சொன்னான். நான் கேட்டன். கோபால் நமக்காக வெய்ட் பண்ணுவான்னு அவன் சொன்னா டேய் கோபால் நம்ம கிளாஸ் தா எப்போ வேணா பாத்துக்கலாம். ஆனா அவளை இன்னைக்கு விட்டா பாக்க முடியாது .
சரி மத்தவங்க எல்லா எங்க?
அவனுங்க coollip வாங்க போய்ட்டாங்க.
டேய் எதுக்கு டா வாங்குனாங்க.
நா இப்போ தா வாங்கிட்டு வந்துருக்கன்.
அதுனால என்ன டா இது என்ன கெட்டு போற பொருளா?
உனக்கெல்லாம் 1 பாக்கெட் 1 நாளைக்கே பத்தாது.
நீ மட்டும் என்ன யோக்கியனா?
காலையிலேயே கஞ்சா குடிச்சுட்டு சுத்துறவன்தான?
இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது மற்றவர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.
தமிழரசன், வெங்கடேஷ், பாபு, வசந்த் என மற்ற நண்பர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.
ஹரியும் விக்னேஷும் வரவில்லை.
ரயில்வே டிக்கெட் கவுண்டர் இல் மூன்று டிக்கெட் எடுத்தனர். அவர்கள் டிக்கெட் எடுக்க வரிசையில் நின்றுகொண்டிருக்கும் போது பாபுவும் வசந்தும் ரயில்வே காத்திருக்கும் அறை பாத்ரூம் இல் புகைப் பிடித்துக் கொண்டிருக்கும் போது ரயில்வே போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்கள் இருவரையும் பிடித்து காவல்நிலைய அறைக்கு கொண்டு சென்றார் காவலர்.
சார் சார் விட்ருங்க சார் .
தெரியாம பண்ணிட்டோம்.
ஏன்டா எந்த ஸ்கூல் டா நீங்க?
இத்துனூண்டு இருந்துட்டு என்ன என்ன வேலை பண்றீங்க?
ராஸ்கல்ஸ்..
இந்த விஷயம் தெரியாமல் அவர்கள் வேறு டிக்கெட் எடுத்து விட்டார்கள்.
எல்லோருக்கும் டிக்கெட் எடுத்தால் பணம் செலவாகி விடும் என்பதற்காக மூன்று டிக்கெட் மட்டுமே எடுத்தார்கள்.
கோபால் ஐ தவிர யாரிடமும் போன் இல்லாததால் அவர்களை கண்டுபிடிக்க சிரமம் ஏற்பட்டது.
ரயில்வே காவல் நிலையம் சற்று தொலைவில் இருந்ததால் அவர்கள் ரயில் நிலையத்தின் மறுமுனைக்கு சென்று திரும்பி கொண்டிருக்கையில் கோபால் மொபைலுக்கு அழைப்பு வந்தது.
மறுமுனையில் பேசிய பாபு அழுதுகொண்டே
மச்சி நாங்க பாத்ரூம் ல தம் அடிச்சு மாட்டிகிட்டோம் டா
நானும் வசந்தும் இப்போ போலீஸ் ஸ்டேஷன் ல இருக்கோம் என்றான்.
என் டா இப்டி பண்ணி தொலைச்சீங்க?
நா டிக்கெட் வேற எடுத்துட்டேன் டா
இரு டா வரன்.
என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான்.
போகும் போது மற்றவர்களிடம் விஷயத்தைக் சொல்லி கொண்டே சென்றான்.
காவல் நிலைய முகப்பை அடைந்ததும் பாபு கன்னத்தில் பளார் என்று அறை விட்டான்.
ஏன்டா போலீஸ் வரது கூட தெரியாம தம் அடிப்பீங்களா?
இல்ல மச்சி உள்ள போகும் போது யாருமே இல்ல . ஆனா திடீர்னு போலீஸ் வந்துட்டாரு.
உள்ளிருந்து ரயில்வே போலீஸ் கேஸ் எழுத அழைத்தார்.
யார் கெஞ்சுவதையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் போத்தனூர் வந்து fine கட்டுமாறு கோபால் இன் மொபைல் ஐ வாங்கி கொண்டார்.
அடுத்த நாள் போத்தனூர் செல்வதற்காக கோபால் ஏழு டிக்கெட் வாங்கினான்.
அன்று ரயில்வே ஒலிப்பெருக்கி ஈரோடு- பாலக்காடு டவுன் பாசஞ்சர் ஏழு நிமிடங்கள் தாமதமாக வரும் என்று அறிவித்தது.
- கனிஷ்கர்
கருத்துகள்
கருத்துரையிடுக