யாத்திசை - குருதி வாடையடிக்கும் காற்று
சமீபத்தில் இயக்குநர் தரணி ராசேந்திரன் அவர்கள் இயக்கிய யாத்திசை திரைப்படம் பார்த்தேன்.
பாண்டியர்களின் புறவாழ்வையும் எயினர்களின் ஒடுக்குதலுக்கெதிரான கலகத்தையும் காட்சிவழி படுத்தியிருப்பது பேரனுபவம். பெரும் பொருட்செலவின்றி தேவையற்ற மிகுதி அம்சங்கள் சிறிதுமின்றி திரைப்படம் வெளிவந்திருப்பது காண்போர் பாராட்டுதலுக்குரியனவே. மேலும் வசனங்கள் சங்ககால மொழிநடையை உபயோகப்படுத்தியிருப்பினும் அதன் படத்தின் கதையோட்டத்தினை எவ்விதத்திலும் சீர்க்குலைக்கவில்லை. போர் படங்கள் என்பதற்கான அத்தனை ஸ்டீரியோடைப்களையும் இத்திரைப்படம் உடைந்தெறிந்திருக்கிறது. இனிவரும் முயற்சிகளுக்கு இது முன்முயற்சியாகவும் இருக்கும். பாண்டியனின் படையெடுப்பு மூலம் ஒரு காட்சியில் எயினர்கள் தோல்வியுற ஒரு சந்தர்ப்பம் ஏற்படும். ஆனால் ரணதீர பாண்டியனின் பொறுமை அனைத்தையும் வென்றுவிடும். தரணி ராசேந்திரன் அவர்கள் தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படைப்பாளியாக உயர்ந்துவிட்டார். சிறந்த திரைக்கதை, குளோஸ் அப் கேமரா கோணம் மற்றும் ஆடியன்ஸ் சலிப்பாகாத வகையிலான கதையம்சம் என்று தமிழ் சினிமாவிற்கு ஓர் தரமான படைப்பே இந்த " யாத்திசை"
- கனிஷ்கர்
கருத்துகள்
கருத்துரையிடுக