அரசியல் எனக்கு பிடிக்கும்
ச தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய "அரசியல் எனக்கு பிடிக்கும்" புத்தகத்த சமீபத்துல படிச்சேன்.
இந்த புத்தகத்துல இன்னைக்கு பெரும்பாலான இளைஞர்களுக்கு அரசியல் குறித்த சரியான புரிதல் ஏற்படனுங்கிறத பத்தி நிறைய கட்டுரைகள் எழுதிக்காரு.
பொதுவாவே இளைஞர்கள் அரசியலை விட்டு விலகியே இருக்காங்க. அது எவ்வளவு பெரிய விளைவை ஒரு சமூகத்துல ஏற்படுத்துதுங்கிறத சொல்லியிருப்பாரு.இன்றைய அரசியல் சூழல்ல சரியான தலைவர்கள் இல்லங்கிறது பெரிய பிரச்சினையா இருக்கு. அது மட்டும் இல்லாம பொதுப்புத்தி ல அரசியலே சாக்கடை அப்படிங்கிற கருத்தும் நிலவி வருது. இது போன்ற விஷயங்கள விமர்சித்து அரசியல் குறித்த தெளிவான புரிதல இந்த புத்தகம் நமக்கு அளிக்குதுனு சொல்லலாம். இடதுசாரி அப்புறம் வலதுசாரி அமைப்பு னா என்ன? அப்படிங்குறத பத்தி தெளிவான விளக்கதோட சொல்லிருப்பாங்க.அரசுகளின் தோற்றம், அரச பயங்கரவாதம், மன்னராட்சி, சோஷலிசம், மார்க்சியம், அம்பேத்கரியம், பெரியாரியம் குறித்த உரையாடல்களால் நிறைந்திருக்கிறது இந்தப் புத்தகம்.
அரசியல் பேசுவோம்.
- கனிஷ்கர்
கருத்துகள்
கருத்துரையிடுக