விடுதலை திரைப்படம் என் மதிப்பீடு

வெற்றிமாறன் திரைப்படங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருந்தாலும் சமீப காலமாக புரட்சிகர அரசியலை மேடைகளில் பேசிக்கொண்டுதான் வந்திருக்கிறார். அதன் நீட்சியே விடுதலை திரைப்படம். மலைவாழ் பழங்குடி மக்களை மலைகளில் புரட்சி இயக்கத்துக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் எவ்வாறு போலீசாரின் தாக்குதலுக்கும் வண்புணர்வுக்கு உள்ளாகின்றனர்‌ என்பதை மிகவும் அப்பட்டமாக பதிவு செய்திருப்பார் வெற்றிமாறன். புரட்சியாளர்களை நியாயப்படுத்தாததோடு போலீசாரின் அதிகார துஷ்பிரயோகத்தையும் திரையில் காட்டியிருக்கிறார். புரட்சிப் படையினர் தாக்குதலுக்கு எதிர்த்தாக்குதல் நிகழ்த்த வழியின்றி பழங்குடி மக்கள் மீது தங்களுக்குடைய அதிகாரத்தை செலுத்துகிறார்கள் காவல்துறை. சூரி புரட்சியாளர்களை இறுதியாக பிடித்துத் தருவதோடு படம் முடிகிறது.
போலீஸ்காரராக இருந்தாலும் கூட பழங்குடி மக்களுடன் நட்புடனேயே இருக்கிறார். ஜெயமோகனின் துணைவன் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும் இதன் அரசியல் முற்றிலும் வேறுபட்டது.

    ‌‌‌        - கனிஷ்கர்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்