ஓஷோ
சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகமாக புழங்குகிற பெயர் ஓஷோ. ஒரு சிலர் செக்ஸ் சாமியார் என்றும் ஒரு சிலரோ ஞானி என்றும் மகான் என்றும் போற்றுகின்றனர். இன்னும் சிலரோ கார்ப்பரேட் சாமியார்கள் கலாச்சாரத்திற்கு தொடக்கப்புள்ளியாக இருந்தவர் என்றும் கூறுகின்றனர். எப்படியோ அவருடைய சொற்பொழிவுகளையெல்லாம் புத்தகங்களாக வெளியிட்டிருக்கின்றனர். அதில் விழிப்புணர்வு என்ற தலைப்பினை உடைய புத்தகத்தை வாங்கி படித்துக் கொண்டிருக்கிறேன். ஏதோ இப்புத்தகம் என்னை ஈர்த்தது என்றுதான் கூற வேண்டும். பல்வேறு சந்தேகங்களை அகவுணர்வை தெளிவடைய செய்கிறது. முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும்கூட சில பகுதிகள் நம்மை ஆசுவாசமடைய செய்கின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக