நீங்க எங்க போனாலும் உங்கள கண்காணிச்சுட்டு தா இருப்பாங்க

டைரக்டர் ராம் ஒரு இன்டர்வியூலயோ மேடைப்பேச்சுலயோ சொல்லிருப்பாரு என்னன்னா 
பாபர் மசூதி இடிப்புக்கு முன்னால இந்தியாவில நீங்க எங்க வேணா சுத்தலாம் எல்லா பிரதேசங்களிலேயும் இருக்குற மனிதர்களையும் மொழி கடந்து பல்வேறு சங்கிலிகளைக் கடந்து நேசிக்கவும் பழகவும் முடிஞ்சது. ஆனா பாபர் மசூதி இடிப்புக்கப்புறம் எங்க போனாலும் நம்ம மேல பொய்க்கேசு போடுறதுக்குத்தான் பாக்குறாங்க. 
அப்படிதான் காலேஜ் சீக்கிரமே முடிஞ்சதுனால பீளமேடு ரயில்வே ஸ்டேஷனுக்கு இரண்டு மணி நேரம் முன்னாடியே போயிட்டன். காலேஜ் ஐடி கார்டும் மாட்டிருந்தன். புக் தா படிச்சுட்டு இருந்தன். ஒரு ரயில்வே போலீஸ் வந்து நெறைய கேள்வி கேட்டார். ஏதோ குற்றவாளி கிட்ட கேக்குற தொனியில. நானும் பதில் சொல்லிட்டு படிக்க ஆரம்பிச்சன். இந்தப் பதிவக்கூட ரயில் பயணத்துல தான் எழுதுறேன்.
வாழ்க ஜனநாயகம்.

                - கனிஷ்கர்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்