சிறப்புக்காட்சி சிரமங்கள்
மாஸ் ஹீரோக்களின் திரைப்படம் வெளியாகும் சமயங்களில் கதை எப்படி இருந்தாலும் ஒரு வாரத்திற்குள்ளாகவே கல்லா கட்டிவிடும் என்பதுதான் தமிழ்நாட்டு திரையரங்குகளிலுள்ள நிலை. 500 கோடி 1000 கோடி என்று கலெக்ஷன் எகிறுவது ஒருபுறமிருக்க ரசிகர் காட்சி என்று நடிகர்களின் ரசிகர்கள் செய்யும் அலப்பறைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. நடிகர்களின் கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவதில் தொடங்கி தியேட்டர் நாற்காலிகளை அடித்து நொறுக்குவது வரை அந்த மூன்று மணி நேரத்தில் அமர்களப்பட்டுவிடும் திரையரங்கம். ஏற்கனவே ஐந்து காட்சிகள் திரையிடப்படும்நிலையில் இந்த ரசிகர் காட்சிக்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். டிக்கெட் விலையும் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில் படத்தின் தயாரிப்பு செலவைக் காட்டிலும் மூன்று மடங்கு லாபம் கிடைக்கும்போதும் கூடுதல் காட்சிக்கு அவசியம் என்னவென்று தெரியவில்லை?
தலைவனுக்கு ஜே!
கருத்துகள்
கருத்துரையிடுக