கிரிக்கெட் - வளர்க்கும் பிரிவினை

சமீபத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் போட்டியில் அவுட் ஆகி வெளியேறும் போது மத ரீதியான கோஷமிட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்பதை நினைவில் கொள்ளாமல் அதை ஏதோ இரு நாட்டிற்கிடையேயான யுத்தமாக பாவிப்பதென்பது வன்முறைக்கான அடித்தளமேயன்றி வேறில்லை. பரிணாம வளர்ச்சி அடைந்து பல நூற்றாண்டுகளாகிவிட்டாலும்கூட நம்மிடையேயும் ஒரு சில காட்டுமிராண்டிகள் இருக்கத்தான் செய்கின்றனர் என்பதை மெய்ப்பிக்கிறது இச்சம்பவம்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்