விஸ்வகர்மா யோஜனா திட்டம் - நவீன தீண்டாமை
இந்தியா சாதி எனும் அணையா நெருப்பின் வசம் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த போது பல்வேறு போராளிகள் அந்நிலையை விளக்கி மக்களிடையே அந்த சூழ்ச்சிகளை உடைத்தெறியும் ஆயுதமான கல்வியின் முக்கியத்துவத்தை உணர செய்தனர். தற்பொழுது பழமைவாதம் தளர்ந்து பண்பட்ட சமூகம் உருவாகிக்கொண்டிருந்தது. இந்நிலையில் ஒன்றிய அரசு விஸ்வகர்மா யோஜனா திட்டம் என்ற பெயரில் தொடங்கவிருக்கும் இத்திட்டம் சாதி அடிப்படையில்தான் தொழில் மேற்கொள்ள வேண்டும் என்பதை நிர்பந்தம் செய்வதைப் போன்றது.
அரசாங்கம் என்பது கல்வி மற்றும் திறமையின் அடிப்படையில்தான் ஒவ்வொருக்குமான வாய்ப்புகளை வழங்க வேண்டுமேயொழிய ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டு அல்ல.அரசுப்பணிகளிலும் இதர நிர்வாகங்களிலும் ஒழுங்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் அதையெல்லாம் சரி செய்யாமல் குலத்தொழில் செய்வதை ஊக்குவிப்பதற்கு இவ்வளவு நிதி எதற்கு?
- கனிஷ்கர்
கருத்துகள்
கருத்துரையிடுக