பாலஸ்தீனம் - யூதப் பயங்கரவாதத்தின் பிடியில்

ஹிட்லர் 60 லட்சம் யூதர்களைக் கொன்று குவித்திருக்கிறார் எனும் செய்தியைப் படிக்கும் போது ஒட்டுமொத்த யூத இனத்தின் மீதும் ஒரு வித கருணை ஏற்படுகிறது என்றால் கூட இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்கி பாலஸ்தீனத்தின் மீதும் பாலஸ்தீனியர்களின் மீதும் கண்மூடித்தனமான அடக்குமுறைகளாலும் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் புனித தலங்களின் மீதான தாக்குதல்களாலும் நிலத்தை ஆக்கிரமைப்பிற்குட்படுத்தி இஸ்ரேல் எனும் நாட்டை அமைத்த யூதர்களை என்ன சொல்வதென்று தெரியவில்லை. 

"நான் வாழும் வரை
என் சொற்களும் வாழும், சுதந்திரப் போராளிகளின் கைகளில்
ரொட்டியாகவும் ஆயுதமாகவும் என்றும் இருக்கும்"..
-பாலஸ்தீனப் புரட்சிக் கவி மஹ்மூத்
தர்வீஷ்.


இஸ்ரேலியர்களின் இப்படியான தாக்குதல்களால் பெரும் இன்னலுக்குள்ளான பாலஸ்தீனியர்கள் எதிர்த்தாக்குதல் நிகழ்த்தினால் அவர்களைத் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கும் 
ஊடகங்களும் வலதுசாரி அடிவருடிகளும் பாலஸ்தீனியர்களின் வலியை உணர்வதென்பது சற்று சிரமம் தான்  எனினும் இருப்பிடமின்றி ஒவ்வொரு நாடாக அலைந்து திரிந்து அகதிகளாக ஐரோப்பிய நாடுகள்  முழுமையும் குடியேற உரிமை மறுக்கப்பட்டு  அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெறாமல் இறுதியில் ஓர் இனமே வாழ நிலம் வழங்கிய பாலஸ்தீனியர்களை தீவிரவாதிகள் என்றுரைப்பது எவ்விதத்திலும் தர்க்கமல்ல.
இவை எல்லாவற்றிற்குமான விடையென்பது வரலாறொன்று மட்டும் தான். யூத பயங்கரவாதத்தின் சகாப்தம் நிறைவு பெறுமா? 

         - கனிஷ்கர்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்