பெண் ஏன் அடிமையானாள் - பெரியாரின் குரல்
பெண் ஏன் அடிமையானாள் புத்தகத்தை ஆண்கள் அனைவரும் வாசித்தே ஆக வேண்டும். ஏனெனில், பெண்கள் மதத்தின் பெயரால் சம்பிரதாயத்தின் பெயராலும் எதிர் பாலினத்தாலும் எவ்வாறு ஒடுக்கப்பட்டனர் என்பதையும் அவற்றிற்கான தீர்வையும் பதிவு செய்திருக்கிறார் தந்தைப் பெரியார்.
பெண்களின் நலனிலும் சமூகக் கண்ணோட்டமுமுள்ளவரான தந்தைப் பெரியார் குடிஅரசு இதழில் தான் எழுதிய கட்டுரைகளைப் பெண் ஏன் அடிமையானாள் எனும் தொகுப்பாக வெளியிட்டிருக்கின்றனர். கற்பு குறித்தும் காதல் குறித்தும் ஆண் பெண் உறவுச் சிக்கல்களையும் கருத்தடையின் அவசியத்தையும் 1930 களிலேயே விவாதத்திற்குட்படுத்தியிருக்கிறார்.
- கனிஷ்கர்
கருத்துகள்
கருத்துரையிடுக