அமெரிக்காவிற்கு மண்ட்டோ கடிதங்கள் ஓர் பார்வை

உலக நாடுகளின் மத்தியில் அமெரிக்காவின் வரலாறென்பது அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் கொண்டிருப்பதாக இருக்கிறது. அமெரிக்கா தன்னுடைய ஏகாதிபத்திய நடவடிக்கைகளை ஆயுத விநியோகம், பொருளாதார தடை மற்றும் போர் அறிவித்தல் உட்பட பல்வேறு செயல்பாடுகளினூடாக நிறைவேற்றி வந்திருக்கிறது. அவ்வகையில் அமெரிக்கா பாகிஸ்தானை எவ்வாறு தன்னுடைய சுயலாபத்திற்காகவும் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும் பயன்படுத்திக் கொண்டிருந்தது என்பதை மண்ட்டோவின் இக்கடிதங்களின் வழி மிகத் தெளிவாகக் காண முடிந்தது.

ரஷ்யா நாட்டை விரும்பாதிருந்த அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளை தமக்காதரவாக செயல்படும் நிலைப்பாட்டை ஏற்படுத்திக் கொடுத்து அணுகுண்டுகளையும் ஆயுதங்களையும் பயன்படுத்தி ரத்தவெறியைத் தீர்த்துக் கொண்டது.ஒருபுறம் போர், அணுகுண்டு, ரத்தம், உயிரிழப்புகள் என்றிருக்க மறுபுறமோ நுகர்வுக் கலாச்சாரம் என்ற பெயரில் தங்களுடைய முதலாளித்துவ சுரண்டலை உலகெங்கும் நிகழ்த்திக் கொண்டுதானிருக்கின்றனர்.
மண்ட்டோ அமெரிக்கர்களைப் பார்த்துக் கூறுவது

" பொய் சொல்வது உங்களுக்கு சாத்தியமானது, நிஜமாகவே அதைச் செய்வதோடு ஒரு கலையாகவே மாற்றிவிட்டீர்கள்"

நவீனமயப்படுத்தும் விதமாக நுகர்வுக் கலாச்சாரப் பெருக்கத்தை எவ்வாறு ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் அமெரிக்க முதலாளித்துவம் மேற்கொள்கிறது என்பதை இவ்வரிகள் பகடிக்குள்ளாக்குகிறது.

மேலும் இக்கடிதங்களில் உலக அரசியல் நிலவரங்களையும் அதில் அமெரிக்கா அவ்வப்போது தங்கள் சுயலாபத்திற்காக ஏற்படுத்திக் கொண்ட நிலைப்பாட்டையும் கேலி செய்கின்றன.

நாடுகளுக்கிடையே போர் மூட்டும் அமெரிக்காவை சாடும் கடிதத்தின் சில வரிகள்:
" நீங்கள் ஏன் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு யுத்தத்தைத் தொடங்கக்கூடாது? இதில் கிடைக்கக்கூடிய லாபம். கொரிய யுத்தத்தோடு ஒப்பிட்டால், ஒன்றுமே இல்லாமல் போகும்.
இன்றைய அரசியலில் நிலவும் பின்னணி நுண் தலையீடுகள் குறித்து 1950 களிலேயே கேள்வி எழுப்பியிருப்பார் சாதத் ஹசன் மண்ட்டோ.
 
                     - கனிஷ்கர்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்