"மாமன்னன்" சமூக நீதியை வலியுறுத்துகிறார்.
மாரி செல்வராஜின் முந்தைய படைப்புகள் சாதி அரசியலையும் அது சமூகத்தில் எவ்வாறு ஆழப்பதிந்திருக்கிறது என்பதையும் பேசியது.
அதுபோல இத்திரைப்படமும் தலித் வாழ்வியல் போராட்டத்தைப் பதிவு செய்தது மட்டுமின்றி அரசு நிர்வாகத்தில் தலித் பிரதிநிதித்துவம் எவ்வாறிருக்கிறது என்பதைக் கேள்விக்குள்ளாக்கிறது. தனித்தொகுதிகளில் வெற்றிப்பெறும் சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு பிற சாதியினரால் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை திரையில் மிக நுணுக்கமாக விவரித்திருப்பார்.
மாரியின் முதல் இரண்டு திரைப்படங்களும் தென் தமிழகத்தைக் கதைக்களமாகக் கொண்டவை. இத்திரைப்படம் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்ட அரசியலை பேசியிருக்கும்.
இடையிடையே சில வசனங்களும் காட்சிகளும் சற்றே தர்க்கரீதியாக அணுகப்படாமல் இருந்தாலும், கதை நகர்வு மிகக் கச்சிதமாக அமைந்திருக்கிறது. வடிவேலுவும் பகத் பாசிலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித் தொடங்கிவைத்த முன்நோக்கிய நகர்வுக்கு மாரிசெல்வராஜ் போன்றோர் வலுசேர்க்கின்றனர்.
இத்திரைப்படத்தில் கமர்ஷியலுக்கு சற்று முக்கியத்துவம் தந்திருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக