வகுப்பறைக்குள் வன்முறையாட்டங்கள்

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடந்துள்ள சின்னத்துரை என்ற மாணவன் மீதான தாக்குதல் மிகவும் பரிதாபமானதொரு நிகழ்வு.


 இந்திய சமூகத்தில் சாதியென்பது இளைஞர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் எவ்வாறு ஆழப்பதிந்திருக்கிறது என்பதற்கான சான்றே இச்சம்பவம். இப்படி கல்விக் கற்கும் வயதில் சாதிப்பெருமைக் கொண்டவர்களாக  தாக்குதல் நடத்திய மாணவர்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றனர். சக மாணவன் என்ற எண்ணம் சிறிதுமின்றி இக்கொடூரத்தை அரங்கேற்றியிருக்கின்றனர்.
பள்ளிக்கூடம் என்பது ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டுமேயன்றி இது போல் வன்முறைக்கு வழிகோலாமல் இருத்தல் நலம். 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்