பாரபாஸ் நாவலின் மீது என் அபிப்பிராயம்

பாரபாஸ் - பேர் லாகர் குவிஸ்டு


பாரபாஸ் என்பவன் பைபிளில் வரும் ஒரு கதாப்பாத்திரம் என்பதை புத்தகம் வாங்கிய பின்னரே அறிந்துக்கொண்டேன். பைபிளை முழுதாக வாசித்தால்தான் அதைப் புரிந்துகொள்ள முடியும் என்றும் நினைத்தேன். ஆனால் இயேசுவுக்கும் பாரபாஸுக்கும் என்ன உறவு என்று தெரிந்துக்கொள்ள ஆசைப்பட்டு சிலரிடம் அது குறித்து கேட்டபோது பாரபாஸ் மிகக் கொடூரமானவன் என்றும் குற்றமிழைத்தவன் என்றும் கூறினர்.
மதத்தை ஏற்றுக்கொள்ளமால் இருந்ததே அவன் மீதான குற்றச்சாட்டுக்குக் காரணம். எல்லா இடங்களிலும் கடவுளை ஏற்க மறுப்பவர்களுக்கும் பின்பற்றாதவர்களுக்கும் சமூகத்தில்
நன்மதிப்பற்றவர்களாகவே கருதப்படுகின்றனர். தனக்குப் பதிலாக ஏசு சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என்பதை எண்ணி பாரபாஸ் பதைப்பதைப்பிற்குள்ளாகுவதாக தொடங்கும் நாவல். பாரபாஸ் சிலுவையில் அறையப்பட்டு வலியால் துடித்துக் கொண்டிருக்கும்போது நிறைவு பெறுகிறது. இதற்குள்ளாகவே அவனுடைய வாழ்வின் பல்வேறு தருணங்கள் நாவலில் புனைவாக்கப்பட்டிருக்கின்றன.  க.நா.சு அவர்களின் மொழிபெயர்ப்பு,  தமிழ் நாவலைப் படிப்பதைப் போன்றதொரு அனுபவத்தை தருகிறது. நாவல் ஜெருசலேம் தெருக்களுக்கு நம்மை இட்டு செல்கிறது. மதத்தையும் கடவுளையும் புனிதங்களையும் சம்பிரதாயங்களையும் ஏற்றுக் கொள்வதற்கும் மறுப்பிற்குமான மனோநிலையை நாவல் விசாரணைக்கு உட்படுத்துகிறது. மதம் என்ற போர்வையில் மனிதன் எவ்வாறு மனிதத்தன்மையற்ற செயல்களை முன்னிறுத்திக் கொண்டிருக்கிறான் என்பதையும் நாவல் முன்வைக்கிறது. நாவலில் மிகவும் நோய்மைக்குட்பட்டவனைப் போல மிக மெளன நிலையில் சிந்தனையிலாழ்ந்தவனாக பாரபாஸ் படைக்கப்பட்டிருக்கிறான். 

"எல்லா மதங்களும் ஏதோவொரு விதத்தில் வன்முறையைக் கட்டவிழ்த்துக் கொண்டுதான் இருக்கின்றன".


   

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்