பாலுமகேந்திராவின் "வீடு"
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு Lower Middle Class நபருக்கும் இருக்கும் பெருங்கனவு. எத்தனை நாள்தான் வாடகை வீட்டிலேயே காலம்கடத்துவது என்ற ஏக்கம் தான் அவ்வாறு அவர்களை தோன்ற வைக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் உள்ள மனிதர்களின் நிலையைப் பேசும் திரைப்படமே பாலுமகேந்திராவின் "வீடு".
வாடகைக்கு வசிக்கும் வீட்டுக்கு வக்கீல் நோட்டீஸ் வருவதாக படம் ஆரம்பிக்கும். ஒரு மாதத்திற்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று. அந்த ஒரு வயதான Retired பாட்டு வாத்தியார். அவருடைய இரண்டு பேத்திகள். முதல் பேத்தி அலுவலகம் செல்பவள், இரண்டாவது பேத்தி பள்ளி செல்கிறாள். இவர்களுடைய பெற்றோர் இறந்துவிடுவதால் தாத்தா வீட்டில் வசித்து வருகின்றனர். வீட்டை காலி செய்ய சொன்ன விஷயம் முதல் பேத்திக்கு தெரிய வர அவர்கள் வாடகைக்கு வீடு தேடி அலைகின்றனர். தரகர்கள் மற்றும் கால்டாக்சிக்கு காசு செலவானதே தவிர வீடு கிடைத்தபாடில்லை. இதனால் சொந்த வீடு கட்டுவதற்கான முயற்சியில் இறங்குகிறாள். பேங்க் லோன், காதலலின் உதவி, தாத்தா தன் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த தொகை இவை அனைத்தும் வீடு கட்ட தேவைப்படுகிறது. காண்டிராக்டர் சிமெண்ட் மூட்டைகளை திருடி விற்கிறான். இப்படி பல்வேறு இடையூறுகள் குறுக்கிடுகின்றன. ஆணாதிக்க மனநிலை சமூகத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்று ஒரே ஒரு காட்சியில் பதிவு செய்திருப்பார். அந்த காட்சியில் முதல் பேத்தி வேலை செய்யும் ஆபீஸ் மேனேஜர் லோன் வாங்கி தந்ததற்காக அவளை வெளியே dating செல்ல அழைப்பான் அப்போது அந்த மேனேஜரின் முதல் மகளுக்கு பிரசவம் நடைபெறும் சமயம். படத்தின் இறுதியில் மெட்ரோ வாட்டர் நிர்வாகம் அவ்விடத்தை கையகப்படுத்துகிறது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாள் அந்த முதல் பேத்தி. பாதி கட்டிய வீட்டின் கட்டுமானத்தை பார்த்து விட்டு திரும்பும் போது தாத்தாவும் இறந்துவிடுகிறார். படத்தின் பக்கபலம் அதன் பின்னணி இசை. இசை இளையராஜா. "How to name it" என்று யூடியூபில் தேடிப் பாருங்கள். மெய்சிலிர்க்க வைக்கிறது அந்த இசை. வீடு இல்லாத மனிதர்கள் துயரை காட்சிவழி நகர்த்தியிருக்கிறார் பாலுமகேந்திரா.
- கனிஷ்கர்
கருத்துகள்
கருத்துரையிடுக