வன்முறை தீர்வல்ல.
இன்றைய நவீன உலகம் 5G,6G தொழில்நுட்பத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் சூழலில் வன்முறைகளும் அவற்றிற்கான அடிநாதமும் குறைந்தபாடில்லை. சமீபத்தில் நடைபெற்ற போர்களும் மிக சமீபத்தில் ஆஸ்கார் விழாவில் நிகழ்ந்த வில் சுமித் சம்பவமும் மிக சிறந்த எடுத்துக்காட்டுகள். வில் சுமித் செய்தது சரிதான் என்று வேறு ஒரு சிலர் சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். மீண்டும் 19 ம் நூற்றாண்டிலும் 20 ம் நூற்றாண்டிலும் நிகழ்ந்ததை போன்றதொரு போர் நிகழ்வதற்கான அறிகுறிகள் தானா? மேற்கண்ட நிகழ்வுகள். எல்லா நாடுகளும் இப்படி வன்முறையின் பக்கம் சென்றால் நாட்டு மக்கள் என்ன செய்வார்கள். ஏற்கனவே ஒவ்வொரு நாடுகளும் ராணுவ செலவுக்கு என்று கோடி கணக்கில் செலவிட்டு கொண்டிருக்கிறது. நாட்டு மக்கள் உண்ண உணவின்றியும் கல்வி மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் போது ஆயுதங்கள் வாங்க எதற்கு இவ்வளவு தொகை என்பதே நாம் முன்வைக்கும் கேள்வி?
கல்லூரி மாணவர்கள் செயின் பறிப்பில் ஈடுபடுகின்றனர். சர்வ சாதாரணமாக ஆசிரியரை பள்ளியிலே வைத்து மாணவன் மிரட்டுகிறான்.
மாணவன் கூறியவை
" ஏறினா ரயிலு.. இறங்கினா ஜெயிலு...போட்டா பெயிலு..
இப்படியான ஒரு வன்முறை உணர்வை இங்குள்ள ரவுடி கலாச்சாரமும்,சினிமாவும், அரசியல்வாதிகளும் உருவாக்கி வைத்து விட்டனர்.
காந்தியை போற்றும் சமூகமாக இருந்த நாம் அவரை மறந்துபோனதால் நடக்கும் அசம்பாவிதங்கள் இவை.
1920 இல் ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தி தலைமையில் ஒத்துழையாமை நடைபெற்றது.அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சௌரி சௌரா என்ற இடத்தில் மதுக்கடை எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் 2000 பேர் கலந்து கொள்கின்றனர். காவல் துறையினர் அவர்களை கலைந்து போக சொல்லி உத்தரவிடுகின்றனர். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாமல் கற்களை போலீசார் மீது வீசி தாக்குதல் நடத்துகின்றனர். போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களால் முடியாது போகவே காவல்நிலையத்திற்குள் சென்று ஒளிந்து கொள்கின்றனர். ஆனால் போராட்டக்காரர்களோ காவல் நிலையத்தை தீயிட்டு கொளுத்துகின்றனர்.22 போலீசார் உடல் கருகி உயிர் இழக்கின்றனர்.அடுத்த நாளே சம்பவத்திற்கு நானே பொறுப்பு என்றும், உடனடியாக போராட்டத்தை கைவிடுகிறார் காந்தியடிகள்.
அகிம்சை எனும் வழியை அவர் அன்று தேர்ந்தெடுத்திருக்காவிட்டால் எப்போதோ இந்தியாவில் ரத்த ஆறு ஓடியிருக்கும்.
வன்முறைகளுக்கு துணைபோகாமல் இருப்பதே பண்பட்ட சமூகத்தை உருவாக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக