ஆயிஷா குறுநூல் - இரா.நடராஜன்

தீக்கதிர் பத்திரிகைக்கு தற்பொழுது மாணவ பத்திரிக்யாளர் பயிற்சிக்கு சென்று கொண்டிருக்கிறேன்.ஒருநாள் கதவை திறந்து அலுவலகத்திற்குள்  உள்ளே சென்றவுடன் பத்திரிகை ஆசிரியருக்கு வணக்கம் தெரிவித்து உட்காருவதற்குள் பத்திரிகை ஆசிரியர் "நீங்க அந்த புத்தகத்த வாசிச்சிருக்கீங்களா?" என்று கேட்டார்.இல்லை என்று சொல்லிவிட்டு,  சம்மந்தமே இல்லாமல் சிங்கிஸ் ஐத்மாத்தாவ் இன் "முதல் ஆசிரியர்" (First Teacher) படித்திருக்கிறேன் என்றேன்.இங்கு இப்புத்தகத்தைப் பற்றி எழுதியே ஆக வேண்டும் என்று நினைக்கிறேன் ஏனென்றால்,கல்வி என்ற சொல்லைக் கூட அறிந்திராத ஓர் கிராமத்தை சேர்ந்த ஓர் இளைஞன் துய்ஷேன். சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு தன் பணி விடுமுறை காலத்தில் தன் சார்ந்த கிராமத்திற்கு படிப்பறிவு புகட்டும் பணியைச் செய்கிறான்.இதற்கிடையில் எண்ணற்ற இடையூறுகள் அவனுக்கு ஏற்படுகின்றன.எதைப் பற்றியும் கவலைப்படாமல் உயிரைப் பணயம் வைக்கும் போராட்டம் நடத்தினான் என்று தான் சொல்ல வேண்டும்.எப்படியோ அவனுடைய நன்முயற்சியால் அக்கிராமமே கல்வியறிவு பெற்று விளங்கியது.அக்கிராமத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு துறைகளில் மிக உயர்ந்த பொறுப்புகள் வகிக்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டனர்.அவர்கள் அக்கிராமத்தை விட்டு வெளியே வந்து அவர்கள் எவ்வளவு பெரிய பல்கலைக்கழகத்தில் படித்தாலும் சரி அவர்களுக்கு முதல் ஆசிரியராக விளங்கியவர் "துய்ஷேன்"என்ற அந்த நபர்தான்.


சரி இப்போது ஆயிஷா குறுநூல் பற்றி பார்க்கலாம்.கதையில் வரும் ஆயிஷா என்ற கதாபாத்திரம் கேள்விகள் கேட்கிறாள்.இத்தனைக்கும் அவளுடைய ஆசிரியரிடம் தான் கேட்கிறாள்.ஆனால் அவர்களில் ஒரு ஆசிரியரைத் தவிர மற்ற அனைவரும் அவளை அவமானப்படுத்துகிறார்கள்.தன்னுடைய மாற்றுச் சிந்தனை மூலம் பல்வேறு செயல்பாடுகளை செய்கிறாள்.பத்தாம் வகுப்பு படிக்கும் போது பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு போட்டுக் கொடுக்கிறாள்.இதற்காக அவள் கடுமையாக தண்டிக்கப்படுகிறாள்.ஒரு முறை வேதியியல் பாடக்கேள்விகளுக்கு புதிய ஃபார்முலா வைத்து சரியான விடையை கண்டுபிடித்து வகுப்பறையில் உள்ள அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினாள்.இதற்காகவே அவள் உடல் ரீதியாக தண்டிக்கப்படுகிறாள்.காரணம்: guide ல் உள்ளது அப்படியே பரீட்சை பேப்பரில் இருக்க வேண்டுமாம்.இது அந்த பாடத்தின் ஆசிரியர் சொன்னது.இவ்வாறு அவளுடைய பள்ளிவாழ்க்கை சென்று கொண்டிருக்கும் போது ஒருநாள் சோதனை என்ற பெயரில் உடலில் ஒரு வேதிப்பொருள் செலுத்திக்கொண்டு இறந்து விடுவார்.

இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.நமது கல்வி முறையின் தோல்வி, படைப்பாக்கச் சிந்தனையை வெளிக்கொணர வழிவகை செய்யாமல் இருத்தல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்வி முறை மாற்றியமைத்தல் என்றெல்லாம் இல்லாமல் மாணவனை ஒரு இயந்திரம் போன்று பாவிக்கும் ஆசிரியர்கள் உள்ள வரையிலும் கல்வியாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் ஆலோசனைகளை கல்வித்துறை ஏற்காத வரையிலும் இங்கு ஒன்றும் மாறப்போவதில்லை.

இன்னும் எத்தனை ஆயிஷாக்களை இழக்க வைக்கப்போகிறதோ? இந்தக் கல்விமுறை.அடிமைக்கல்வி முறை!
                  - கனிஷ்கர்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்