வாங்கக்கூடாது
வீட்டில் இருக்கும் புத்தகங்களை படித்துத் தீர்க்கும் வரையிலும் இனி புத்தகங்கள் வாங்குவதில்லை என்று முடிவெடுத்து விட்டேன்.காசு இருப்பவர்கள்,காசு இல்லாதவர்கள்,முடி வைத்திருப்பவர்கள், சொட்டை மண்டை கொண்டவர்கள் என்று யார் வேண்டுமானலும் புத்தகம் வாங்கலாம்.புத்தகத்தை வாங்குவது பெரிய விஷயமே இல்லை அதை எடுத்து வாசிப்பதே அசாதாரணம்.எனக்குத் தெரிந்து நிறையபேர் செய்யும் தவறே அதுதான் புத்தகத்தை வாங்கி வாங்கி வீட்டை நிரப்பிக் கொண்டு வீட்டிற்கு வருபவர்களிடம் தங்களை புத்திஜீவியாக காட்டிக் கொள்வது.அது என்ன அலங்கார தோரணமா? வீட்டில் மாட்டி அழகு பார்க்க?
புத்தகத்திற்கு தரும் மரியாதை என்பது வாங்கியவுடன் எப்பாடுபட்டாவது அதனை வாசிப்பதே.
- கனிஷ்கர்
கருத்துகள்
கருத்துரையிடுக