நான் ஏன்? - ஆர்தர் ஏஷ் வாழ்வில் ஓர் தருணம்.

நான் ஏன்? (Why Me?) என்று கூகுளில் தேடினால் கூட ஒரு சில கட்டுரைகளே கிடைக்கின்றன.நிச்சயமாக ஒரு மனித மாண்பைத் தான் அக்கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன என்பதில் ஐயமில்லை.உலகறிந்த டென்னிஸ் வீரர் ஆர்தர் ஏஷ் ( Arthur Ashe) இம் மானுடத்திற்கு அளித்த சிறு கூற்று தான் அது!
அமெரிக்காவின் குடிசைப் பகுதியிலிருந்து உலக டென்னிஸ் சாம்பியன் ஆனவர் அல்லவா அவர்.மகத்தான உழைப்பினால் மட்டுமே அதனை
 சாத்தியமாக்கியிருப்பார்.1980 களின் மத்தியப் பகுதியில் அவருக்கு எய்ட்ஸ் (AIDS) நோய் தாக்கியது.ஒழுக்க மதிப்பீட்டு நடவடிக்கைகளினால் அவருக்கு அந்நோய் ஏற்படவில்லை.அதே தசாப்தத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவைச் சிகிச்சைக்காக ரத்தம் மாற்றும்போது கவனக்குறைவினால் எய்ட்ஸ் தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் நிகழ்ந்த விபரீதம்.அவரது ரசிகர்களும் ஊடகங்களும் அவர் நிலைக்கு பெரிதும் வருந்தினர்.அவருடைய மரணமும் குறிக்கப்பட்டாயிற்று.
அச்சூழலில் அவரைச் சந்தித்த நிருபர் கேட்கும் கேள்வி இது.
உங்களுக்கு மட்டும் கடவுள் ஏன் இப்படியான தீரா வியாதி ஒன்றைக் கொடுத்துவிட்டார்? என்று.
அதற்கு ஆர்தர் ஏஷ் சிறிதும் தாமதமின்றி உடனடியாக அளித்த பதில்.இது.
50 மில்லியன் குழந்தைகள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தனர்,
5 மில்லியன் பேர் டென்னிஸ் விளையாட கற்றுக்கொண்டனர்,
500000 பேர் தொழில்முறை டென்னிஸ் விளையாடுபவர்கள்,
50000 பேர் உலகத் தகுதிச் சுற்று போட்டிகளில் பங்கேற்பவர்கள்,
5000 பேர் கிராண்ட்ஸ்லாம் போட்டியை அடைகிறார்கள்,
50 பேர் விம்பிள்டன் போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்,4 பேர் அரையிறுதியை அடைபவர்கள்,
இருவர் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டோம்.
இறுதியாக நான் வென்று என் கையில் கோப்பையை வைத்திருந்தப்போது யாரும் என்னிடம் எப்படி உங்களால் இப்படிப்பட்டதொரு சாதனை நிகழ்த்த முடிந்தது என்று கேட்கவில்லை.

இப்போது என்னை Why Me? என்று கேட்பவர்கள், அப்போது நான் குடிசைப் பகுதியில் எளிய கருப்பின குடும்பத்திலிருந்து உலக சாம்பியன் ஆன போது கேட்கவில்லையே?!
அவர் மரணத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அக்கணத்தில் அவர் எழுப்பிய அக்கேள்விதான் எத்தனை அர்த்தம் நிறைந்தது.
                   - கனிஷ்கர்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்