"பெத்தவன்" நாவல் ஓர் பார்வை.

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் என்பது வெளிச்சமின்றி நடந்தேறிக் கொண்டே இருக்கிறது.ஊடகங்களினால் கூட அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு அச்சம்பவங்கள் நடைப்பெற்று வருகின்றன.
.இந்நாவலில் உள்ள முக்கிய கதாப்பாத்திரங்கள் பழனி, பாக்கியம், பெரியசாமி. ஊரே பழனியின் வீட்டில் கூடி பஞ்சாயத்து பேசுவதாய் நாவல் ஆரம்பிக்கும். பின்னர் பாக்கியத்திற்கும் பெரியசாமிக்கும் ஏற்பட்ட காதல் குறித்தும் அது அந்த ஊரில் எத்தகைய பாதிப்பையெல்லாம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் ஒரு நுண் அளவு மாறுபாடில்லாமல் விவரித்திருப்பார் இமையம்.ஊர் வழக்கு,சாதிப் பஞ்சாயத்து,சாதி மானம் கொண்ட மனிதர்கள் என்று அனைத்துமே நாவலில் விமர்சிக்கப்பட்டிருக்கும்.இது போன்ற சம்பவங்களில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையே பெருமளவு நிகழ்கிறது என்பதை இப்படைப்பு ஆணித்தரமாக நிறுவுகிறது.ஒவ்வொருஆணவக் கொலையிலும் பெற்றோர் விடுத்து வேறு யார் யாருக்கெல்லாம் அதில் தொடர்பு உண்டு என்று அரசியல் பேசியிருப்பார்.இறுதியாக யார் புதைக்கப்படுகிறார்கள் என்பதே கதை.வட தமிழகத்தை கதைகளமாகக் கொண்டு எழுதப்பட்டது இந்நாவல்.நாற்பது பக்கங்களில் மிக எளிய நடையில் நாவல் எழுதப்பட்டிருக்கும்.இளம் தலைமுறையினர் வாசிக்க வேண்டிய மானுடப் பிரதியே "பெத்தவன்" நாவல்.ஆணவக் கொலைகளை ஆதரிப்போரும் வாசிக்கலாம், தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள.
                - கனிஷ்கர்.
                     

கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்